பாதி மனிதன், பாதி மிருகம்; அதிசய உயிரனம்: தென் ஆப்பிரிக்காவில் பரபரப்பு!!
வெள்ளி, 23 ஜூன் 2017 (13:03 IST)
தென் ஆப்பிரிக்காவில் ஆட்டு குட்டி ஒன்று பாதி மனிதன், பாதி மிருகம் போன்ற உடலைப்புடன் பிறந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது கிராமத்தில்தான் இந்த நிகழ்வு நடந்துள்ளது. அங்கு ஆடு ஒன்றிற்கு பாதி மனிதன் மற்றும் பாதி ஆடு போன்ற உடலமைப்புடன் இறந்த நிலையில் குட்டி பிறந்துள்ளது.
இதை கண்ட கிராம மக்கள் அதை தீய சக்தி என நினைத்து அச்சத்தில் இருந்தனர். அதைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர் நடத்திய சோதனையில், ஆட்டின் வயிற்றில் இருந்த நோய் காரணமாக் இவ்வாறு பிறந்துள்ளதாக தெரிவித்தார்.
ஆனால், மக்கள் இதை நம்பாத காரணத்தினால் அந்த ஆட்டுக் குட்டியின் பிரேத பரிசோதனை அறிக்கையை மக்கள் முன்னிலையில் தெரிவிக்கவுள்ளதாக மருத்துவர் கூறினார்.