படுக்கையறைக்குள் பறந்து வந்த கார்: தம்பதிகள் அதிர்ச்சி

திங்கள், 16 ஜூலை 2018 (08:13 IST)
அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் என்ற மாகாணத்தில் ஒரு தம்பதிகளின் படுக்கையறைக்குள் ஒரு கார் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் மாகாணத்தில் கென் மற்றும் பெயின்லின் என்ற தம்பதிகள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் வழக்கம்போல் இரவில் தங்கள் படுக்கையறையில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். அதிகாலை சுமார் 3 மணிக்கு திடீரென அவர்களது படுக்கையறைக்குள் ஒரு கார் பறந்துவந்து சுவரை துளைத்து கொண்டு வந்து நின்றது. இதனை பார்த்த கென் தம்பதிகள் அதிர்ச்சி அடைந்தனர்
 
இந்த காரை ஆல்வா ரிச்சர்ட்ஸ் என்ற 35 வயது டிரைவர் ஒருவர் ஓட்டி வந்ததாகவும், அவர் போதையில் இருந்ததால் மிக வேகமாக வந்ததாகவும் ஒரு கட்டத்தில் கார் அவருடைய கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புச்சுவரில் மோதி பறந்து, கென் தம்பதியின் படுக்கையறைக்குள் புகுந்ததாகவும் கூறப்படுகிறது.
 
இதுகுறித்து தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் டிரைவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்