ஆண்களுக்கு கருத்தடை மாத்திரை: அறிவியல் வினோதம்...

செவ்வாய், 20 மார்ச் 2018 (15:09 IST)
குழந்தை பிறப்பை தடுப்பதற்காக கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்தப்படும். கருத்தடை மாத்திரைகள் பெண்களுக்கானது என்பது வழக்கமானது. தற்போது ஆண்டுகளுக்கு கருதடை மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
ஆண்களுக்கு கருத்தடை ஆபரேசன் மூலமே குழந்தை பிறப்பு தடுக்கப்படுகிறது. ஆனால், தற்போது ஆண்களுக்கும் கருத்தடை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த மாத்திரைக்கு டைமெதென்ட்ரலோன் அன்டிகோனேட் அல்லது டி.எம்.ஏ.யூ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மாத்திரைகளை தினமும் ஒன்று வீதம் எடுத்துக்கொள்ள வேண்டும் எனபது டாக்டர்களின் பரிந்துரை.
 
இதனால், பின்விளைவுகளோ பாதிப்புகளோ ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளனர். 18 முதல் 50 வயது வரையிலான நல்ல உடல் நலத்துடன் கூடிய 100 பேரிடம் இந்த மாத்திரை பரிசோதிக்கப்பட்ட பின்னரே இது குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்