பயிற்சியாளரை கடித்து குதறிய சர்க்கஸ் சிங்கம் (வீடியோ)

வெள்ளி, 2 டிசம்பர் 2016 (15:56 IST)
எகிப்தில் உள்ள அலெக்சாண்டிரியா பகுதியில் உள்ள சர்க்கஸ் ஒன்றில் சிங்கம், ஷாகீன்(35) என்ற பயிற்சியாளரை பார்வையாளர்கள் முன் கடித்து குதறியது.


 

 
எகிப்தில் உள்ள அலெக்சாண்டிரியா பகுதியில் சர்க்கஸ் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. அங்கு பார்வையாளர்கள் கூடிய நிலையில் சர்க்கஸ் தொடங்கியுள்ளது. அப்போது சிங்கத்தின் சாகச நிகழ்ச்சிக்காக ஷாகீன்(35) என்ற படிற்சியாளர் சிங்கம் இருக்கும் கூண்டிற்குள் இருந்துள்ளார்.
 
அப்போது அவர் கூண்டுக்குள் இருந்த மூன்று சிங்கங்களையும் அடித்து இரண்டை மேஜை மீதும், மற்றொன்றை ஏணி மீதும் ஏற வைத்துள்ளார். அதில் மேஜை மீது இருந்த சிங்கம் ஒன்று அவர் மீது பாய்ந்து கடிக்கத் தொடங்கியது. இதனால் பதற்றமடைந்த மற்ற பயிற்சி வீரர்கள் சிங்கத்தை விரட்டனர்.
 
அதன் பின்னர் அவரை உடனடியாக அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவர் 10 வருடங்களுக்கு மேலாக சர்க்கஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
 
தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
 
நன்றி: New Video

வெப்துனியாவைப் படிக்கவும்