சீனாவின் முதல் விண்வெளி நிலையம் என்ற பெருமையைப் பெற்ற டியான்காங் 1 விண்வெளி நிலையம். இது தனது கட்டுப்பாட்டை இழந்து விட்டதால் பூமியை நோக்கி வருவதாகவும், பூமியில் வந்து விழும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இது பூமியில் எங்கு வந்து விழும் என்பது தெரியவில்லை. கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விண்ணுக்கு அனுப்பப்பட்ட இந்த விண்வெளி நிலையம், சீனாவின் முதல் விண்வெளி நிலையம் ஆகும். டியான்காங் 1 விண்வெளி நிலையத்தை அடிப்படையாக வைத்து 2020ல் மிகப் பெரிய விண்வெளி நிலையத்தை கட்டமைக்க சீனா திட்டமிட்டிருந்தது.