இந்தியாவை மிரட்டும் சீன ஊடகங்கள்

திங்கள், 25 ஜூலை 2016 (16:11 IST)
3 சீன பத்திரிகையாளர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டதின் பிரதிபலனை இந்தியர்கள் அனுபவிப்பார்கள் என்று சீன ஊடகங்கள் மிரட்டல் விடுத்துள்ளது.
 

 


வுகியாங், டாங்லு மற்றும் ஷி யோங்காங் ஆகிய மூன்று சீன நாட்டை சேர்ந்த பத்திரிகையாளர்கள் இந்தியாவில் உள்ள சீன நாட்டின் சின்குவா பீரோ செய்தி நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். வுகியாங் மற்றும் டாங்லு புது செல்லியில் உள்ள சின்குவா பீரோ செய்தி நிறுவனத்தில் தலைமை பொறுப்பு வகிக்கின்றனர். ஷி யோங்காங் என்பவர், முப்பை கிளையில் பத்திரிகையாளரக பணிபுரிகிறார். இவர்கள் மூவரும், கர்நாடகா மாநிலம் பெங்களூரில், சீனாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட திபெத்தியரை, போலி ஆவணங்கள் மூலம் போய் சந்தித்து பேசி உள்ளனர். இதை அறிந்த இந்திய அரசு, இவர்கள் சீன நாட்டின் உளவாளிகளாக இருக்கலாம் என்று சந்தேகித்து, மூவரையும் நாட்டில் இருந்து வெளியேற்ற முடிவு செய்தது. இதை தொடர்ந்து, இவர்களின் இந்திய விசாவை புதுப்பிக்க மறுத்துவிட்டது.

இந்நிலையில், சீன ஊடகங்கள் வெளியிட்ட செய்தி குறிப்பில், “அணு வினியோகக் குழுவில், இந்தியா பங்கு பெற, சீனா ஆதரவு தெரிவிக்காததை மனதில் வைத்து இந்தியா இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றது, இது போன்ற செயல்களை இந்தியா உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும், இல்லை என்றால் அதற்கான பிரதிபலனை இந்தியர்கள் அனுபவிப்பார்கள்” என்று கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்