அமெரிக்காவை எச்சரித்த சீனா

புதன், 25 மே 2016 (05:52 IST)
வியட்நாம் மீதான ஆயுத விற்பனை தடையை நீக்கிய அமெரிக்காவை, சீனா எச்சரித்துள்ளது.


 

 
சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியை சீனா சொந்தம் கொண்டாடி வருவதற்கு பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனினும் அப்பகுதியில் ராணுவ நிலைகளை சீனா உருவாக்கி வருவதால் பதற்றம் நீடிக்கிறது.

இந்த சூழலில் சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரமாக எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக பகையை மறந்து வியட்நாமுடன் நட்புறவை வளர்க்கும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது. 
 
இதற்காக 3 நாள் பயணமாக வியட்நாம் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா தலைநகர் ஹனோயில் அந்நாட்டு அதிபர் டிரான் டாய் குவாங்கை சந்தித்து இரு தரப்பு நாட்டின் உறவுகள் குறித்து விவாதித்தார். பின்னர் இருநாட்டு தலைவர்களும் கூட்டாக இணைந்து பத்திரிகையாளர்களை சந்தித்தனர். 
 
அப்போது, வியட்நாம் மீதான ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி தடை முழுமையாக நீக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்தார். 
 
இந்நிலையில், ஆயுத விற்பனை மீதான தடையை நீக்கிய அமெரிக்காவின் நடவடிக்கைக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
இது தொடர்பாக சீனாவின் அரசு நாளிதழில் அமெரிக்காவும், வியட்நாமும் ஆசிய பிராந்தியத்தில் தீப்பற்ற வைக்கக் கூடாது என்று கூறியுள்ளது. சீனாவின் எழுச்சியை அதிபர் ஒபாமாவின் நடவடிக்கைகள் தடுக்காது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்