இந்தியா கோரிக்கையை ஏற்று, மானசரோவர் செல்ல புதிய தரைவழியைத் திறந்தது சீனா

செவ்வாய், 23 ஜூன் 2015 (05:30 IST)
இந்தியா கோரிக்கையை ஏற்று, திபெத்தில் அமைந்துள்ள கைலாஷ், மானசரோவர் புனித தலங்களுக்குச் செல்ல புதிய தரைவழியை சீனா திறந்துள்ளது.
 

 
இந்தியாவில் இருந்து ஒவ்வோரு வருடமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள், திபெத்தில் அமைந்துள்ள கைலாஷ் மற்றும் மானசரோவர் புனித தலங்களுக்குச் சென்று வருகின்றனர். ஆனால் கைலாஷ் மலையின் தொலைவு மற்றும் அங்குச் செல்ல விசா போன்ற கடுப்பாட்டுக் காரணமாக, அவர்களில் பலர் பயணங்களைத் தவிர்த்து வந்தனர்.
 
இந்நிலையில், கடந்த ஆண்டு இந்தியா வந்த சீன அதிபர் ஜின்பிங்யிடம், மானசரோவர் செல்ல புதிய தரைவழியைத் திறக்குமாறு இந்திய பிரமதர் நநேந்திர மோடி கேட்டுக் கொண்டார். அதன்படி இமயமலை அடிவாரம் வழியாகப் புதிய தரைவழி பாதையைச் சீனா அரசு திறந்துள்ளது.
 
இதைத்தொடர்ந்து 12 நாள் பயணமாகச் சென்ற இந்திய பக்தர்கள் குழு முதன் முதலாக இந்த வழியாகச் சென்று கைலாஷை அடைந்தனர்.
 
இரு நாடுகளுக்கு இடையேயான மதப்பரிமாற்றங்களை மேம்படுத்த, இந்த நடவடிக்கை உதவும் என சீனா தெரிவித்து உள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்