இதற்காக சைபீரியாவில் ‘மணப்பெண் சுற்றுலா’ ஆண்டுதோறும் நடைபெறுகிறது. பெறும்பாலும், இளம் தொழிலதிபர்கள் சைபீரியாவில் நடைபெறும் ‘மணப்பெண் சுற்றுலா’வில் கலந்துகொண்டு, அந்த நிகழ்ச்சியின் இறுதியில் தங்களுக்குப் பிடித்த மணமகளைத் தேர்ந்தெடுத்து, திருமணம் செய்துகொள்கிறார்கள்.
இந்த ஆண்டு பெய்ஜிங், ஹாங்காங், ஷாங்காய், ஷென்ஜென் பகுதிகளைச் சேர்ந்த 5 தொழிலதிபர்களும் ரஷ்யாவைச் சேர்ந்த 25 பெண்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 25-45 வயது ஆண்களும் 25-35 வயது பெண்களும் கலந்துகொண்டனர்.
முதலில் சம்பிரதாயச் சந்திப்பு, மணமகன், மணமகள் குறித்த விவரங்கள் பரிமாற்றம், குடும்பம், தொழில், பிடித்தவை, பிடிக்காதவை, எதிர்பார்ப்புகள், திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை எப்படி இருக்கும் போன்ற விஷயங்களை எல்லாம் ஆண்களும் பெண்களும் பரிமாறிக்கொள்கிறார்கள். இறுதியில் தங்கள் இணையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
சீன ஆண்கள், பெண்களை மிகவும் மதிக்கிறார்கள் என்று ரஷ்யப் பெண்கள் குறிப்பிட்டுள்ளனர். மிதமான அழகுடன் அமைதியாகப் புன்னகையுடன், ஆண்களுடன் போட்டிப் போடாமல் ரஷ்ய பெண்கள் இருப்பதாக சீன ஆண்கள் குறிப்பிட்டுள்ளனர்.