தென் சீனக் கடல் பகுதியில் கட்டுமானத்தை நிறுத்த முடியாது: சீனா

செவ்வாய், 19 ஜூலை 2016 (12:50 IST)
சீனக் கடல் பகுதியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவு ஒன்றில் விமானங்கள் இறங்குவதற்கு வசதியாக ஓடுபாதை அமைக்கும் பணியை நிருத்த முடியாது என அமெரிக்காவிடம் தன் முடிவை கூறியது சீனா.



தெற்கு சீனக்கடல் பகுதியில் சுமார் 3.5 மில்லியன் சதுர கி.மீட்டர் பரப்பளவை சீனா ஆக்கிரமித்தது. இந்த பகுதிகள் தங்களுக்குதான் என உரிமை கொண்டாடி வந்தது சீனா. ஆனால், பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, தைவான் ஆகிய நாடுகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

தென் சீனக் கடலில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவு ஒன்றில் விமானங்கள் இறங்குவதற்கு வசதியாக ஓடுபாதை ஒன்றை சீனா ரகசியமாக அமைத்து வருவதை செயற்கைக் கோள் படம் ஒன்று அம்பலப்படுத்தியது.  

இதுதொடர்பாக, நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நடுவர் தீர்ப்பாயத்தில் பிலிப்பைன்ஸ் அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. இதனிடையே, தென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய பகுதியில் சீனாவுக்கு உரிமையில்லை’ என்று சர்வதேச தீர்பாயம் கூறியது.

இதனை தொடர்ந்து தீர்ப்புக்கு எதிராக, சீனா வெள்ளை அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், தென் சீனக் கடல் பகுதியில் கட்டுமானத்தை நிறுத்த மாட்டோம் என்று அமெரிக்காவிடம் சீனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்