ஏடிஎம் மையத்தில் நடந்த கூத்து : திருடன் என்ன செய்தான் தெரியுமா ?

வியாழன், 14 மார்ச் 2019 (16:33 IST)
சீனாவில் ஏடிஎம் மையத்தில் திருடன், ஒரு பெண்ணிடம் திருடிய பணத்தை திருப்பி கொடுத்துள்ளான். இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாகவே திருடன் என்றதும் எல்லொருக்கும் மனதில் ஜர்க் ஆகும்.  அதே சமயம் தான் கொள்ளை அடித்த பொருட்களை எப்படியாவதும் அபகரித்துச் செல்வது வழக்கம்.
 
ஆனால், சீனாவில் ஹூயிங் நகரில் உள்ள ஏடிஎமில் ஒரு பெண் பணம் எடுக்க தன் ஏடிஎம் கார்டை போட்டு பின் நம்பரை அழுத்தியுள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக பணம் வந்த போது பின்னே ஓடி வந்து நின்றான். தன் கையில் இருந்த கத்தியைக் காட்டி மிரட்டவே அந்த பெண் பயந்து கத்தியுள்ளார். 
 
அப்போது அப்பெண் எடுத்த பணத்தை வாங்கியுள்ளான். அதன்பிறகு மறுபடியும் ஏடிஎம்லில் பணத்தை எடுக்கச் சொல்லி  இருக்கிறான். ஆனால் ஏடிஎம்மில் ஜீரோ பேலன்ஸ் இருந்தததைப் பார்த்து திருடன் வாங்கிய பணத்தை பெண்ணிடமே திருப்பிக் கொடுத்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
 
இதற்கு சமூகவலைதளத்தில் பாராட்டுக்கள் குவிந்த போதும் போலீஸார் குற்றவாளியை கைது செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்