சிக்கன் டிக்கா மசாலா'வை கண்டுபிடித்த சமையல் வல்லுநர் காலமானார்!

வியாழன், 22 டிசம்பர் 2022 (11:48 IST)
சிக்கன் டிக்கா மசாலா'வை கண்டுபிடித்த சமையல் வல்லுநர் காலமானார்!
சிக்கன் டிக்கா மசாலா என்ற உணவை முதன் முதலில் கண்டுபிடித்த பாகிஸ்தானைச் சேர்ந்த சமையல் கலை வல்லுநர் காலமானார். அவருக்கு உலகம் முழுவதிலுமுள்ள சமையல் கலை வல்லுனர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
பாகிஸ்தானை சேர்ந்த அலி அகமது அஸ்லாம் என்பவர் சிக்கன் டிக்கா மசாலாவை கண்டுபிடித்தார். இவர் சிறு வயதிலேயே பாகிஸ்தானிலிருந்து ஸ்காட்லாந்து நாட்டுக்கு சென்று விட்டார் என்பதும் அங்கு அவர் கொஞ்சம் கொஞ்சமாக சமையலை பற்றி தெரிந்து கொண்டு முதன்முதலாக தந்தூரி அடுப்பில் சிக்கன் டிக்கா மசாலாவை உருவாக்கலாம் என்பதை கண்டுபிடித்தார் 
 
அதன் பின்னர்தான் இந்த உணவு இந்தியா உள்பட உலகம் முழுவதும் பிரபலமானது என்பது குறிபிடத்தக்கது. இந்த நிலையில் சிக்கன் டிக்கா மசாலாவை கண்டுபிடித்த சமையல் கலை வல்லுநர் மறைவுக்கு ட்விட்டரில் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்