புற்று நோயை தடுக்கும் தக்காளி: ஆய்வில் கண்டுபிடிப்பு!!
திங்கள், 15 மே 2017 (13:10 IST)
தக்காளி பெரும்பாலான உணவு வகைகளில் சேர்க்கப்படுகிறது. சமையளுக்கு தக்காளி இன்னியமையாத பொருளாகவே பார்க்கப்படுகிறது.
தக்காளியில் வயிற்று புற்று நோய் வராமல் தடுக்கும் சக்தி இருக்கிறது என்பது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் உள்ள ஆன்கோலஜி ஆய்வு மைய நிபுணர் வயிற்று புற்று நோய் ‘மாலிக்னன்ட் செல்’ எனப்படும் திசுக்களால் ஏற்படுகிறது. இதன் மூலம் புற்று நோய் வெகுவாக பரவுகிறது.
ஆனால் தக்காளி சாறுக்கு புற்று நோயை உருவாக்கும் திசுக்களை அழிக்கவும், வளரவிடாமலும், பரவாமலும் தடுக்கும் சக்தி உள்ளது என கண்டரிந்துள்ளார்.
எனவே, உணவில் அதிக அளவு தக்காளி சேர்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.