Cancer cure finally - 100% குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பு!

வியாழன், 9 ஜூன் 2022 (10:25 IST)
மருத்துவ வரலாற்றில் பெரும் திருப்பமாக புற்றுநோயை 100% குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

 
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 2020-ல் கிட்டத்தட்ட 10 மில்லியன் மக்கள் இறந்துள்ளனர். இது புற்றுநோயானது கிட்டத்தட்ட ஆறில் ஒரு இறப்புக்கு காரணமாகும். 2020 ஆம் ஆண்டில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 2.21 மில்லியன், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 1.93 மில்லியன், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 2.26 மில்லியன் என கணக்கிட்டது.  
 
இந்நிலையில் வரலாற்றில் முதன் முறையாக, அமெரிக்காவின் மன்ஹாட்டனில் உள்ள மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் கேன்சர் சென்டரில் நோயாளிகளுக்கு 100% புற்று நோய் ஒழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம், 12 மலக்குடல் புற்றுநோயாளிகளுக்கு டோஸ்டார்லிமாப் (dostarlimab) என்ற மருந்து வழங்கப்பட்டது. 
 
12 நோயாளிகளுக்கு சோதனை முயற்சியாக 3 வாரங்களுக்கு ஒருமுறை என்ற வீதத்தில் 6 மாதங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. இதன் முடிவில் புற்றுநோய் முற்றிலுமாக குணமானது தெரிய வந்திருக்கிறது. இதனை மருத்துவர்கள் என்டோஸ்கோபி, எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம் உறுதி செய்துள்ளனர். 
 
இந்த சோதனையானது அளவில் சிறியதாக இருந்தாலும் நீண்ட மற்றும் வலிமிகுந்த கீமோதெரபி அமர்வுகள் அல்லது அறுவை சிகிச்சைகள் இல்லாமல் புற்றுநோயை முழுவதுமாக அகற்ற முடியும் என்ற நம்பிக்கையை கொண்டு வந்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்