இந்தியாவுடன் மோதுவதா? கனடா பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும்: லிபரல் கட்சி கோரிக்கை..!

Siva

வியாழன், 17 அக்டோபர் 2024 (07:23 IST)
இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடிக்கும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்ய வேண்டும் என கனடாவில் உள்ள லிபரல் கட்சி எம்பி கோரிக்கை விடுத்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்தியா மீது கனடா பிரதமர் குற்றம் சாட்டி வரும் நிலையில், இரு நாட்டு உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கனடாவில் உள்ள லிபரல் கட்சியைச் சேர்ந்த எம்பி ஒருவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, "கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்ய வேண்டும், கனடா மக்கள் அதைத்தான் விரும்புகிறார்கள்" என்றும் தெரிவித்துள்ளார்.
 
இந்தியாவுடன் ஆன உறவுகள் குறித்தும், லிபரல் கட்சி செல்வாக்கு நிறைந்த பகுதிகளில் நடந்த தேர்தலில் ஆளும் கட்சி தோல்வி அடைந்ததையும் குறிப்பிட்டு, இந்த இரண்டுக்கும் பொறுப்பேற்று கனடா பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக, "கனடா மக்கள் மீது தாக்குதல் சம்பவங்களை இந்தியா நிகழ்த்துகிறது" என கனடா பிரதமர் ஜஸ்டின் குற்றம் சாட்டிய நிலையில், கனடா பிரதமரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து, இந்தியாவில் உள்ள கனடா தூதர் மற்றும் ஆறு பேர் உடனடியாக வெளியேற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கு பதிலடியாக, கனடாவுக்கான இந்திய தூதர் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: தி.மு.க. அரசும், கவர்னரும் புது காதலர்கள் போல சேர்ந்துவிட்டனர்: செல்லூர் ராஜூ

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்