கால்களை சேர்த்து வைத்தால் உன்னை யார் கற்பழிக்க முடியும்? - ஆபாச கேள்வி கேட்ட நீதிபதி நீக்கம்

வெள்ளி, 2 டிசம்பர் 2016 (12:28 IST)
கனடா நாட்டில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணிடம் ஏடாகூடமாக கேள்வி கேட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றவாளி என கூறி, குற்றம் சுமத்தப்பட்டவரை விடுதலை செய்த நீதிபதி ஒருவர் தனது நீதிபதி பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


 

 
கனடா நாட்டில், கல்கேரி நகரில் ராபின் கோம்ப் என்பவர் நீதிபதியாக உள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு இவரிடம் ஒரு பலாத்கார வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. 
 
இந்த வழக்கின் விசாரணையின் போது பாதிக்கப்பட்ட 19 வயது பெண்ணிடம், “அந்த நபர் பலாத்காரம் செய்ய முயன்றபோது அதிலிருந்து தப்பிக்க ஏன் முயற்சி செய்யவில்லை. உங்கள் கால்கள் இரண்டையும் ஒன்றாக சேர்த்து வைத்திருந்தால் அந்த நபர் உங்களை பலாத்காரம் செய்ய முடிந்திருக்காதே. எனவே நீதான் குற்றாவாளி” எனக் கூறியதோடு மட்டுமில்லாமல், பலாத்காரம் செய்தவரையும் விடுதலை செய்தார் ராபின் கோம்ப். நீதிபதியின் இந்த கேள்விக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். 
 
எனவே, அவரின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டு, இளம்பெண்னை கற்பழித்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், அப்படி தீர்ப்பு வழங்கிய ராபின் கோம்ப் தற்காலிகமாக நீதிபதி பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.  
 
இந்நிலையில், அவர் மீதான விசாரணையை 5 நீதிபதிகள் அடங்கிய கமிட்டி நேற்று நடத்தியது. அப்போது அவர்களிடம் விளக்கம் அளித்த ராபின் கேம்ப், அந்த பெண்ணிடம் அப்படி பேசியதற்காக மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறினார்.
 
ஆனாலும், மக்கள் மத்தியில் நம்பிக்கை இழக்க வைக்கும், அவரைப் போன்ற நீதிபதிகள் பணியில் தொடர அனுமதிக்கக் கூடாது  என்று முடிவெடுத்து, அவரை நிரந்தரமாக பணியில் இருந்து நீக்க அந்த கமிட்டி சிபாரி செய்துள்ளது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்