இது குறித்த அறிவிப்பை அண்மையில் வெளியிட்ட கனடா அரசு, மாணவர்களின் பர்மிட் மட்டுமின்றி வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கான அனுமதி அளிக்கும் விதிகளிலும் சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு 35 சதவீதத்துக்கும் குறைவான சர்வதேச மாணவர் பர்மிட்களை நாங்கள் வழங்குகிறோம். அடுத்த வருடம் இந்த எண்ணிக்கை 10 சதவீதம் குறையும். கனடாவுக்கு வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் வருவது பொருளாதாரத்துக்கு வலு சேர்க்கும். ஆனால் அதே நேரத்தில் மாணவர்களை தவறான பாதையில் சிலர் பயன்படுத்திக் கொள்வதை அனுமதிக்க முடியாது. அதனால் தான் வெளிநாட்டவரை அனுமதிப்பதில் விதிகளை மாற்றி உள்ளோம்” என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.