1.93 கி.மீ நீளத்தில் பீட்ஸா; உலக சாதனை படைத்த சமையல் கலைஞர்கள்

திங்கள், 12 ஜூன் 2017 (15:59 IST)
அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் 1.93 கி.மீ நீளம் கொண்ட பீட்ஸாவை அந்நாட்டு சமையல் கலைஞர்கள் தயாரித்து உலக சாதனை படைத்துள்ளனர்.


 

 
பீட்ஸா விரும்பாத இன்றைய தலைமுறையினர் யாரும் இல்லை. பல்வேறு வகையான பீட்ஸா உள்ளது. அதில் ஹயாய் பீட்ஸா உலக புகழ் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதை தயாரித்த சாம் அணமையில் காலமானார்.
 
நம் ஊரில் பஜ்ஜி, வடை போல் வெளிநாடுகளில் பீட்ஸா, பர்கர் என்ற உணவு பொருட்கள். தற்போது பீட்ஸாவை கொண்டு உலக சாதனை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் மனித நேயத்தையும், நட்பையும் கொண்டாடும் வகையில் நீளமான பீட்ஸா செய்ய முடிவு செய்யப்பட்டது.
 
அதன்படி ஏராளமான சமையல் கலைஞர்கள் இணைந்து 1.93 கி.மீ நீளத்தில், 7,808 எடைக்கொண்ட பீட்ஸா ஒன்றை தாயாரித்தனர். கடந்த ஆண்டு இத்தாலியில் இதேபோல் போல் நீளமான பீட்ஸா தயாரிக்கப்பட்டது. அதுதான் உலக சாதனையாக இருந்தது. தற்போது அதை கலிபோர்னியா சமையல் கலைஞர்கள் முறியடித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்