குளியலறையில் வழுக்கி விழுந்த அதிபர்! – பழைய நினைவுகளை இழந்த சம்பவம்!

வியாழன், 26 டிசம்பர் 2019 (12:44 IST)
பிரேசில் அதிபர் பொல்சனேரோ குளியலறையில் தடுக்கி விழுந்து பழைய நினைவுகளை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் அதிபர் ஜெயீர் பொல்சனேரோவுக்கு ஆண்டு தோறும் ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்துவிடும் போலும்! கடந்த ஆண்டு அதிபர் பதவிக்கு போட்டியிட்ட பொல்சனேரோவை ஆசாமி ஒருவர் கத்தியால் குத்தியதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமாகி திரும்பினார்.

தற்போது பிரேசிலியாவில் குடும்பத்தினருடன் வசித்து பொல்சனேரோவுக்கு மற்றுமொரு சோதனை. கடந்த வாரம் குளிக்க சென்றவர் குளியலறையில் கால் இடறி விழ தலையில் பலத்த அடிப்பட்டுள்ளது. உடனடியாக பிரேசில் ஆயுதப்படை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பொல்சனேரோவுக்கு 10 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போல்சனேரோ ”எனக்கு தலையில் அடிப்பட்டதில் அன்றைய சம்பவங்கள் மற்றும் சில நினைவுகள் இல்லாமல் போய்விட்டது. தீவிர சிகிச்சைக்கு பிறகே எனது நினைவுகளை நான் மீட்டெடுத்தேன்” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்