சோப்பு நுரையை வாயில் உற்றி அபாஷன்: விபரீதத்தில் முடிந்த நெருக்கம்...
புதன், 10 ஜூலை 2019 (11:20 IST)
லண்டனில் சிறுமி ஒருவரின் கருவை கலைக்க காதலன் சோப்பு நுரையை வாயில் ஊற்றி கொடுமை படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் வசித்து வரும் 22 வயதான ஹாரிப், சிறுமி ஒருவருடன் நட்புடன் பழகி வந்துள்ளார். இருவருக்கும் இடையேயான நட்பு கால போக்கில் காதலாகி, காதலால் பல நேரங்களில் எல்லை மீறியுள்ளனர். இதனால் அந்த சிறுமி கர்ப்பாமாகியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த காதலன் கருவை கலைக்கும்படி கேட்க அந்த சிறுமி மறுக்கவே, காதலன் அந்த சிறுமியை வீட்டில் அடைத்து கருவை கலைக்கும் முயற்சியில் தனது உறவினருடன் ஈடுப்பட்டுள்ளார்.
உறவினருடன் சேர்ந்து அந்த சிறுமிக்கு மது ஊற்றிக்கொடுத்து கடுமையாக தாக்கியுள்ளான். சிறுமி அடி வாங்கி சோர்வு அடைந்ததும் சிறுமியின் வாயில் சோப்பு நுரையை ஊற்றி கருவை கலைக்க முயற்சித்துள்ளான். அந்த இடத்தில் இருந்து எப்படியோ தப்பி சிறுமி போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
காதலன் மீது வழக்கு பதியப்பட்ட விசாரணை நடத்தப்பட்டு, அவனுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.