ஊழியர்கள் அனைவரையும் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு அழைத்துச்சென்ற முதலாளி!

வியாழன், 7 ஜூலை 2022 (16:16 IST)
ஊழியர்கள் அனைவரையும் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு அழைத்துச்சென்ற முதலாளி!
தன்னிடம் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரையும் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்ற முதலாளி குறித்த தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது 
 
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி என்ற நகரில் ஐடி நிறுவனத்தை நடத்திவரும் கத்யா என்பவர் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் அனைவரையும் இந்தோனேசியாவில் உள்ள பாலி என்ற தீவுக்கு இலவசமாக சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார் 
 
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காலத்தில் வீட்டிலிருந்து பணி செய்து வந்த தனது ஊழியர்களுக்கு இது ஒரு புத்துணர்ச்சியாக இருக்கும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார் 
 
இதனையடுத்து ஐரோப்பா நாடுகளுக்கு சுற்றுலா செல்ல உள்ளதாகவும் அங்கும் அவர் தனது ஊழியர்களை அழைத்து செல்ல இருப்பதாகவும் கூறியுள்ளார். அவர் இந்த முடிவை ஊழியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்