இதுவரை விக்ரம் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட் படமாக கோப்ரா உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக படப்பிடிப்பு நடந்துவந்த கோப்ரா கடந்த மாதம் முடிவுற்றது. இதையடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வெளியானது. இப்போது ரிலீஸ்க்கான வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் தமிழக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. அதுபோல படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமையையும் யுனைடெட் இந்தியா எக்ஸ்போர்ட்டர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. முன்னதாக தொலைக்காட்சி உரிமையைக் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.