’பயங்கரம்’ - சிறைச்சாலையில் குண்டுவெடிப்பு 10 கைதிகள் பலி

சனி, 13 ஆகஸ்ட் 2016 (01:58 IST)
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா புறநகர்ப்பகுதியான பரானாக்கில் உள்ள சிறையில் திடீரென குண்டு வெடித்தது.


 
முதற்கட்ட விசாரணையில், கைதிகள் சிலர் வார்டனை சந்திக்கச் சென்றபோது அப்பகுதியில் குண்டு வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து துப்பாக்கி சூடும் நடந்ததாக கூறப்படுகிறது. இதில் போதைப்பொருள் விற்கும் டீலர்கள் உள்ளிட்ட 10 கைதிகள் கொல்லப்பட்டதாகவும் சிறை வார்டன் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சிறையிலிருந்து கைதிகள் தப்பிச்செல்லும் முயற்சியாக குண்டு வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்