அடுத்தடுத்த விபத்து: இந்தோனேசிய தீவுகளில் மர்மம்?

புதன், 4 ஜூலை 2018 (15:13 IST)
இந்தோனேசியாவில் சுலாவெசி தீவில் இருந்து சிலாயர் தீவிற்கு  படகு பயணித்த போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இத விபத்தில் 24 பேர் பலியாகியுள்ளனர் என முதல் தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்தோனேசியாவில் உள்ள சுலாவெசி தீவில் இருந்து அருகில் உள்ள சிலாயர் தீவுக்கு படகில் 139 பேர் சென்றுள்ளனர். கரையில் இருந்து 300 மீட்டர் தூரம் சென்ற நிலையில் மோசமான வானிலை காரணமாக படகு விபத்துக்குள்ளானது.
 
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதுவரை இறந்த நிலையில், 24 பேரின் உடல் மீடகபட்டுள்ளது. 
 
மேலும், 74 பேர் உயிருடன் உள்ளனர். பயணிகள் உயிர்காப்பு கவசம் அணிந்திருந்ததால் பலி எண்ணிக்கை குறைந்துள்ளது என கூறப்படுகிறது. இதே போல் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சுமத்ராவில் உள்ள பிரபல ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 
 
இந்த விபத்தில் 160-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். அவர்களை தேடியும் யாரும் கிடைக்கவில்லை. இதையடுத்து தேடுதல் பணி கைவிடப்பட்ட நாளில் அடுத்த விபத்து நடந்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்