அமெரிக்காவில் ஆளில்லா விமானத்தில் ரத்தம்!!

வெள்ளி, 9 டிசம்பர் 2016 (16:29 IST)
அமெரிக்காவில் ஆளில்லா விமானம் மூலம் மனித ரத்தம் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த விமானங்கள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படுகிறது.


 
 
எதிரி நாடுகளின் நிலைகளை உளவு பார்க்கவும், தீவிரவாதிகளை குண்டு வீசி அழிக்கவும் ‘ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. அதை தொடர்ந்து நீண்ட தூரங்களுக்கு பீட்சா மற்றும் மளிகை சாமான்கள் சப்ளை செய்ய பயன்படுத்தப்பட்டன.
 
தற்போது மனிதர்களின் உயிர்காக்கும் ரத்தத்தை சுமந்து சென்று பத்திரமாக சேர்க்கும் பணியை ஆளில்லா விமானங்கள் செய்து வருகின்றன. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் மற்றும் இடையூறு இன்றி மிக விரைவாக ரத்தம் கிடைத்து மனித உயிர்கள் காக்கப்படுகின்றன. 
 
ரத்தம் கெட்டுப் போகாமல் இருக்க ஆளில்லா விமானத்தில் குளிர் சாதன கருவி பொருத்தப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்