சூரியனை விட சுமார் 1,200 கோடி அளவு பெரிய கருந்துளை கண்டுபிடிப்பு

வெள்ளி, 27 பிப்ரவரி 2015 (17:49 IST)
நம் சூரியனை விட சுமார் 1,200 கோடி அளவு பெரிய கருந்துளை ஒன்று விண்வெளியில் இருப்பதை சீன விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
 
நம் சூரியனை விட சுமார் 1,200 கோடி அளவு பெரிய கருந்துளை ஒன்று விண்வெளியில் இருப்பதை சீன விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு SDSS J0100+2802 என்று பெயரிடப்பட்டுள்ளது. கருந்துளை என்பது விண்வெளியின் ஒரு பகுதியாகும். இதனுள் ஒளி கூட புக முடியாது. இந்தக் கருந்துளை தனக்கு அருகில் இருக்கும் அனைத்தையும் ஈர்த்துக் கொள்ளும் சக்தி கொண்டது. இதனால் ஏற்படும் வெப்பம் காரணமாக, ஒளித்துகள்கள் மின்னும் கதிர்களை வெளியிடும் தன்மை கொண்டவையாக உள்ளன. இந்த ஒளிக் கதிர்கள் 'குவாசார்' என்று அழைக்கப்படுகின்றன. இந்த கருந்துளை பூமியில் இருந்து 1,280 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்