Tik Tok-ஐ தடை செய்தால் Facebook வர்த்தகம் டபுளாகும்- டிரம்ப்

Sinoj

வெள்ளி, 8 மார்ச் 2024 (19:51 IST)
சீனாவில் டிக்டாக் செயலியை தடை செய்தால் ஃபேஸ்புக் நிறுவனத்தின் வர்த்தக இரட்டிப்பாக  உயரும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, அமெரிக்க நாடாளுமன்றத்தில், நேற்று, அமெரிக்கர்களின் தரவுகளை வெளிநாட்டு எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கும் சட்டம் மற்றும் வெளி நாட்டு எதிரிகளால் கட்டுப்படுத்தப்படும் செயலிகளுக்காக தடைச்சட்டம் ஆகியவற்றின் மீதான் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 50-0  உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
 
இதையடுத்து, அமெரிக்க அரசின் அனைத்து சாதனங்களிலும் டிக்டாக் செயலியை பயன்படுத்த தடைவிதித்து அமெரிக்க அரசு உத்தரவு பிறப்பித்தது.  இந்த நிலையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவின் டிக்டாக் செயலியுடன் ஃபேஸ்புக் நிறுவனத்தை ஒப்பீடு செய்து தன் சமூகவலைதள பக்கத்தில் ஒரு பதிவிட்டிருக்கிறார்.
 
அதில், டிக்டாக் ஆப்பை தடைசெய்தால்,ஃபேஸ்புக்  மற்றும் மார்க் ஜூகர்பெர்க்கின் வர்த்தகம் இருமடங்காக உயரும் என்வும், கடந்த தேர்தலில் ஃபேஸ்புக்  நிறுவனம் மோசடியில் ஈடுபட்டது. அமெரிக்காவின் உண்மையான எதிரி ஃபேஸ்புக் நிறுவனம் என்று விமர்சித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்