நாடாளுமன்றத்தில் குழந்தைக்கு பாலூட்டிய ஆஸ்திரேலிய எம்பி

வியாழன், 11 மே 2017 (04:04 IST)
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஒருபக்கம் காரசாரமாக விவாதம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் தனது இரண்டு மாத குழந்தைக்கு பெண் உறுப்பினர் லாரிசா வாட்டர்ஸ் என்பவர் பாலூட்டி கொண்டிருந்தார். இதன்மூலம் நாடாளுமன்றத்தில் குழந்தைக்கு பாலூட்டிய முதல் பெண் எம்பி என்ற வரலாற்று சாதனையை பெற்றார்



 


பெண் எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் பாலூட்ட அனுமதிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு கோரிக்கை விடுத்த எம்பிக்களில் முக்கியமானவர் இந்த லாரிசா வாட்டர்ஸ். அந்த வகையில் கடந்த ஆண்டு இதற்கென தனிச்சட்டம் இயற்றப்பட்டது. சட்டம் இயற்றிய பின்னர் இதுவரை நாடாளுமன்றத்தில் யாரும் பாலூட்டவில்லை. நேற்று முதல்முறையாக லாரிசா வாட்டர்ஸ் பாலூட்டி சாதனை செய்தார்

இந்த தகவலை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள வாட்டர்ஸ், ‘நாடாளுமன்ற அவையில் பாலூட்டப்படும் முதல் குழந்தை எனது மகள் ஆலியா என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம்’ என்று தெரிவித்துள்ளார். இவர் அந்நாட்டின் பசுமைக் கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்