அகதிகளுக்கு இடமில்லை. எல்லையை மூடியது ஆஸ்திரேலியா

செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (07:16 IST)
ஆஸ்திரேலிய எல்லைக் கதவுகள் மூடப்பட்டு உள்ளதால், அகதிகளுக்கு இடமில்லை என்று ஆஸ்திரேலிய பாதுகாப்பு துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இதனால் அகதிகள் திக்கு தெரியாமல் உள்ளனர்.




கடந்த ஓபாமா ஆட்சியில் ஆஸ்திரேலியா-அமெரிக்கா இடையே அகதிகள் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. அதன்படி ஒருமுறை மட்டும் அமெரிக்காவில் அகதிகளை குடியமர்த்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர் அமெரிக்கா-ஆஸ்திரேலியா  இடையே ஏற்பட்ட அகதிகள் மீள்குடியமர்த்தும் ஒப்பந்தம் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிஅது. இந்நிலையில், அகதிகள் தொடர்பான கொள்கையை மீண்டும் ஆஸ்திரேலியா உறுதி செய்துள்ளது.

சமீபத்தில் ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றில் வெளியாகியுள்ள செய்தியில் ஆஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் டட்டன் தங்களது எல்லைகள் மூடப்பட்டே உள்ளதாக மீண்டும் விடுத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் கடல் வழியாக நியூசிலாந்து செல்ல முயற்சித்ததாக எட்டு பேர் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்