ஈக்வெடாரில் அதிபர் வேட்பாளர் படுகொலை...60 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம்

வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (20:45 IST)
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று ஈக்வடார். இந்த நாட்டில் வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அதிபர் தேர்தல் வரவுள்ளது.  இதில் , அங்குள்ள பிரபல கட்சிகளைச் சேர்ந்த 8 பேர் போட்டியிடுகின்றனர்.

இவர்களில் ஒருவர்  பெர்னாண்டோ வில்லிசென்சியோ. இவர் ஒரு பத்திரிக்கையாளராக இருந்த நிலையில் அந்த நாட்டின் ஊழலுக்கு எதிராகத் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்துள்ளார்.

விரைவில்  நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடும் அவர் பிரச்சாரம் செய்து வந்தார். தலைநகர் குயிட்டோவில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் கலந்து கொண்டு பேசினார்.

அப்பிரச்சாரம் முடிந்தபின் பெர்னாண்டோ தன் காரில் ஏறும்போது, மர்ம நபர் ஒருவர் பெர்னான்டோவை நோக்கித் துப்பாக்கியால் சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குயிட்டோவில் ஆயுதங்களுடன் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த வெளிநாட்டைச் சேர்ந்த 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பெர்னாண்டோர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அங்கு 60  நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்