டிரம்ப் மீதான நம்பிக்கையை அமெரிக்க இளைஞர்கள் இழக்கிறார்களா?

வியாழன், 8 நவம்பர் 2018 (11:16 IST)
அமெரிக்க இடைகால தேர்தல் முடிவுகள் குறித்து ஒரு தெளிவான சித்திரம் கிடைத்துவிட்டது. பெரும்பாலும் அனைவரும் எதிர்பார்த்தது போல ஜனநாயகவாதிகள் பிரதிநிதிகள் சபையிலும், செனட் சபையில் குடியரசு கட்சியும் வென்றுள்ளன.
பெரிய வியப்பேதும் இல்லை என்றாலும், அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் என்னென்ன நேரும் என்ற கேள்வியை இந்த தேர்தல் முடிவுகள் ஏற்படுத்துகின்றன.
 
எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு அதிகளவிலான எண்ணிக்கையில் பெண்கள் போட்டியிட்டார்கள், வெல்லவும் செய்திருக்கிறார்கள்.
 
முதல்முறை பதத்தை அதிகமுறை பயன்படுத்துவது போல தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.
 
இரண்டு முஸ்லிம் பெண்கள் (ரஷிதா, மினிசோடா) காங்கிரஸ் செல்வதற்கு வெற்றி பெற்று இருக்கிறார்கள்.
 
அது போல எப்போதும் இல்லாத வகையில் வயதில் மிகவும் இளைய பெண் வெற்றி பெற்று இருக்கிறார். அமெரிக்க பூர்வகுடி பெண்ணும் முதல்முறையாக வெற்றி பெற்றிருக்கிறார்.
தன்பாலின ஈர்ப்பாளரான ஜார்ட் போலிஸ் இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆளுநராக ஆகி இருக்கிறார்.
 
பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் வென்றதன் மூலம் கடந்த எட்டு ஆண்டுகளில் முதல்முறையாக அந்நாட்டின் கீழவையை கைப்பற்றியுள்ள ஜனநாயக கட்சிக்கு இந்த வெற்றி அதிபர் டிரம்பின் முயற்சிகளை முறியடிக்கும் வாய்ப்பாக அமையக்கூடும்.பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் வென்றதன் மூலம் கடந்த எட்டு ஆண்டுகளில் முதல்முறையாக அந்நாட்டின் கீழவையை கைப்பற்றியுள்ளது ஜனநாயக கட்சி.
 
பிரதிநிதிகள் சபையில் தோல்வி என்றாலும், செனட்டில் குடியரசு கட்சியின் பலம் அதிகரித்திருக்கிறது.
 
முதல் இரண்டு ஆண்டுகள் காங்கிரஸின் இரண்டு சேம்பர்களிலும் டிரம்புக்கு வலுவான ஆதரவு இருந்தது. இனி அவ்வாறாக இருக்கப் போவதில்லை.
 
பிரதிநிதிகள் சபையில் குடியரசு கட்சி தோல்வி அடைந்திருக்கிறது. பிரதிநிதிகள் சபை அதிபர் மேல் விசாரணை மேற்கொள்ளலாம், அவருக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றலாம்.
 
ஆனால் அதே நேரம் இது மோசமான தோல்வியும் அல்ல. டிரம்ப் செனட்டில் நல்ல வெற்றி பெற்றிருக்கிறார், அவரே இதனை, "மாபெரும் வெற்றி" என வர்ணிக்கிறார்.
வெற்றி தோல்விகளைகடந்து இந்த தேர்தலிலேயே முக்கிய பங்கு வகித்திருக்கிறார் டிரம்ப். சிபிஎஸ் கருத்துக் கணிப்புபடி65 சதவீதம் பேர் வாக்களிப்பதற்கு டிரம்பே காரணம் என்கிறார்கள்.
 
அமெரிக்க தேர்தல்: கீழவையில் தோல்வி, செனட்டில் வெற்றி, கொண்டாடும் டிரம்ப்
குடியரசும், ஜனநாயகமும் இத்தனை காலம் குடியரசுக் கட்சிக்கு வாக்களித்த புறநகர் மாவட்டங்களில் இந்த முறை ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது.
 
2020 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் டிரம்புக்கு சுலபமாக இருக்காது என்பதையே இது காட்டுகிறது. 2016 ஆம் ஆண்டு குடியரசு கட்சியை ஆதரித்த படித்த கல்லூரி மாணவர்களின் வாக்கை பெறுவது டிரம்புக்கு சுலபமான ஒன்றாக இருக்காது. எதிர்பார்த்த அளவுக்கு டிரம்ப் சிறப்பாக செயல்படவில்லை என இளைஞர்கள் கருதுகிறார்கள். ஆளுநருக்கான போட்டியில் சுவாரஸ்யமான சில விஷயங்கள் உள்ளன. 2016 ஆம் ஆண்டு உற்சாகமாக டிரம்புக்கு வாக்களித்த பல மாகாணங்கள் இந்த முறை அவ்வாறாக செய்யவில்லை.
 
சிகாகோவில் உள்ள பெரிய மாகாணமான இலிநோய் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறது. கன்ஸஸிலும் டிரம்பின் நெருங்கிய நண்பரான க்ரிஸ் தோல்வி அடைந்திருக்கிறார்.
 
ஆனால், அதே நேரம் டிரம்புக்கு நல்ல செய்தியும் இல்லாமல் இல்லை. ஜார்ஜியா, ஃப்ளோரிடா ஆகிய மாகாணங்களில் டிரம்பின் ஆதரவாளர்கள் வென்றிருக்கிறார்கள். இது 2020 அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு உதவக் கூடும்.
 
ஐவோ, ஒகயோ ஆகிய மாகாணங்களிலும் குடியரசு கட்சிக்கே வெற்றி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்