நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்தால் 12.70 லட்சம் பேர் பலி - அதிர்ச்சி ரிபோர்ட்!

வியாழன், 20 ஜனவரி 2022 (23:04 IST)
நுண்ணுயிரி எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக் கொண்டதால் 12,70,000 உயிரிழந்துள்ளதாக, பிரபல மருத்துவ இதழ் ரிபோர்ட். 

 
பிரபல மருத்துவ இதழான லான்செட் தனது சமீபத்திய ஆராய்ச்சியில் நுண்ணுயிரி எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக் கொண்டதால் 2019 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 12,70,000 ஆயிரம் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. 
 
இந்நிலையில் இதனை குறிப்பிட்டு உலக சுகாதார அமைப்பின் முதன்மை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் நுண்ணுயிரி எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக் கொள்வதில் கட்டுப்பாடுகள் தேவை என எச்சரித்துள்ளார். 
 
கொரோனா போன்ற பெருந்தொற்று காலத்தில் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் எடுத்துக் கொள்வது அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு இது குறித்த தகுந்த நடவடிக்கையை சம்மந்தப்பட்ட துறையினர் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்