பூஸ்டர் தடுப்பூசி செலுத்திய அமெரிக்க அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு!

வியாழன், 5 மே 2022 (08:00 IST)
பூஸ்டர் தடுப்பூசி செலுத்திய அமெரிக்க அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு!
பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்ட அமெரிக்க அமைச்சருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி வேண்டும் என உலக சுகாதார மையம் அறிவித்திருந்தது
 
மேலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது 
 
இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பிளிங்க் என்பவர் 2 டோஸ் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் வீட்டில் இருந்து அவர் தனது அலுவலக பணிகளை மேற்கொள்வார் என்றும் அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார் 
 
இரண்டு டோஸ் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செய்து கொண்ட போதிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்