வடகொரியாவை சமாளிக்க அமெரிக்கா ரஷ்யா தீவிர அலோசனை!!

செவ்வாய், 7 மார்ச் 2017 (14:36 IST)
கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ளது வடகொரியா. கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது.


 
 
இந்நிலையில், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமல், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுதம் மற்றும் அதி நவீன ஏவுகணை பரிசோதனைகளை நடத்தி வருகிறது.
 
வட கொரியா அடுத்தடுத்து பரிசோதித்த நான்கு ஏவுகணைகளில் மூன்று ஜப்பானுக்கு சொந்தமான கடல் பகுதியில் விழுந்தது. மேலும் ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்கும் அடுத்தகட்ட பணிகளை தொடருமாறு அதிபர் உத்தரவிட்டப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
 
என்வே, வட கொரியாவின் சவாலை சமாளிப்பது எப்படி? என்பது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே-வுடன் ஆகியோர் அவசர ஆலோசனை நடத்தி உள்ளனர். இதன் விளைவுகள் கூடிய விரைவில் தெரியவரும் என எதிர்ப்பார்க்க படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்