அமெரிக்கா, கனடாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் – பீதியில் மக்கள்

சனி, 6 ஜூலை 2019 (09:08 IST)
அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் தொடர்ந்து மூன்று நாட்களாக சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் உண்டாகி வருவது அந்த மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று முன்தினம் அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கலிபோர்னியா மாகாணத்தில் பல வீடுகள் இடிந்தன. நிலத்தடி எரிகுழாய்கள் உடைந்து பல பகுதிகளில் தீ பரவியது.

அந்த சேதம் குறித்த முழுமையான விவரங்கள் தெரிய வருவதற்குள் அமெரிக்காவின் பல பகுதிகளில் சிறிய அளவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் பதறியடித்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அமெரிக்காவின் அண்டை நாடான கனடாவிலும் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ரிக்டர் அளவில் 4.9 மற்றும் 5 என பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேதம் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்