சினிமாவில் வருவது போல் ஏலியன்கள் பூமியை தாக்கும் : பீதியை கிளப்பும் விஞ்ஞானிகள்

ஞாயிறு, 19 ஜூன் 2016 (16:10 IST)
ஹாலிவுட் படம் தி இண்டிபெண்டன்ஸ் டே திரைப்படத்தில் வருவது போல், ஏலியன்கள் என்று அழைக்கப்படும் வேற்றுகிரகவாசிகள் பூமியை தாக்குவதற்கு தயாராகி வருவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.


 

 
விண்வெளியில் உள்ள மற்ற கிரகங்களில் வேற்று கிரகவாசிகள் வாழ்வதாகவும், அவ்வப்போது அவைகள் பறக்கும் தட்டு மூலம் பூமிக்கு வந்து செல்வதாகவும் நம்பப்படுகிறது. ஏலியன் பற்றி ஏராளமான ஆங்கில திரைப்படங்களும் வெளிவந்துள்ளது.
 
தி இண்டி பெண்டன்ஸ் டே படத்தில் எலியன்கள் பூமியை தாக்குவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். அதேபோல், உண்மையிலேயே, ஏலியன்கள் பூமியை தாக்க வாய்ப்பிருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். ஆனால், அது இப்போது இல்லை. 1500 வருடங்களுக்கு பிறகு.


 

 
இதுபற்றி கருத்து தெரிவித்த அமெரிக்க கார்னெல் பல்கலைக்கழக விஞ்ஞானி இவான் சாலமனைட்ஸ் “இதுவரை விண்வெளியில் இருந்து வேற்று கிரகவாசியின் குரலை யாரும் கேட்டதில்லை. அதைவைத்து அங்கு வேற்றுகிரகவாசிகள் இல்லை என கூற முடியாது. அக்குரல் எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம்.
 
சுமார் 1500 ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் பூமிக்கு வந்து தாக்குதல் நடத்த வாய்ப்பிருக்கிறது. தற்போது டி.வி. மற்றும் ரேடியோ ஒளிபரப்பு சிக்னல்கள் விண்வெளிக்கு சென்று 80 ஆண்டு ஒளிவேகத்தில் மீண்டும் பூமிக்கு திரும்புகின்றன. அதன் வழியாக கூட அவர்கள் சிக்னல்களை அனுப்பலாம். ஆனால், அதை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. 
 
எனவே வேற்றுகிரக வாசிகள் அனுப்பும் சிக்னலை பெற கடுமையாக முயற்சி செய்து வருகிறோம்” என்று அவர் கூறினார்.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்