இந்தியாவிற்கு பிறகு, இப்போது ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானுக்கு செல்லும் நீர்வரத்தை குறைக்க அணைகள் கட்ட திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதனால் பாகிஸ்தான் அரசும் பாகிஸ்தான் மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் தாலிபான் ஜெனரல் முபின், பாகிஸ்தானுக்குச் செல்லும் நீரை தடுத்து வைக்க, காபூல் அரசுக்கு அணைகள் கட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் என்று மீர் யாப் பாலூச் தகவல் வெளியிட்டுள்ளார்.
காபூல் நதியின் துணைநதியாகிய குனார் நதி, ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தானுக்குள் பாய்கிறது. இது பாகிஸ்தானுக்கு முக்கியமான நீர்வழியாக கருதப்படுகிறது. இதனால் பாகிஸ்தானுக்கு புதிய சங்கடம் உருவாகியுள்ளதாக கருதப்படுகிறது.