63 வயதான மூதாட்டி ஒருவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறிய போது தனது ஆண் நண்பர் கடந்த 1973-ஆம் ஆண்டு பள்ளியில் படிக்கும்போது ஒரு மோதிரம் கொடுத்ததாகவும் அந்த மோதிரத்தை கைகழுவும்போது கழற்றி வைத்ததாகவும் அப்போது அந்த மோதிரம் தொலைந்து விட்டதாகவும் அதன்பின்னர் அவர் பல இடங்களில் தேடியும் அந்த மோதிரம் கிடைக்கவில்லை என்றும் கூறினார்
இந்த நிலையில் 47 ஆண்டுகளுக்கு முன் தொலைத்த மோதிரம் தற்போது கிடைத்துள்ளது என்றும் காடு ஒன்றில் குழி தோண்டிக் கொண்டிருக்கும் போது இந்த மோதிரம் கிடைத்ததாகவும் அதில் தனது பள்ளியின் பெயர் பட்டமளிப்பு ஆண்டுகள் பல குறிப்புகள் இருப்பதாகவும் அந்த மோதிரத்தை எடுத்து காண்பித்துள்ளார். இந்த மோதிரம் தனக்கு கிடைத்தது தனது கணவரே மீண்டும் கிடைத்தது போல் சந்தோஷமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்