பாகிஸ்தானில் வெள்ளத்தில் சுமார் 60 லட்சம் குழந்தைகள் பாதிப்பு!

சனி, 17 செப்டம்பர் 2022 (22:24 IST)
நமது அண்டை  நாடான பாகிஸ்தானில் சமீபத்தில் கனமழை பெய்தால் பெரும்பாலான மா  நிலங்கள் வெள்ளக் காடானது.

இந்த வெள்ளத்தில் பலர் உயிரிழந்து,  மக்கள் பலர் வீடுகளை, உடமைகளை இழந்து தவிக்கின்றனர்.

இந்த நிலையில்,  ஐ நா சபையின் குழந்தைகள் அவசர நிதிய பிரதிநிதி அப்துல்லா பாடில்  பாகிஸ்தான் நாட்டிற்குச் சென்று, அங்குள்ள நிலவரத்தைப் பார்வையிட்டு, ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்,  மக்களுக்கு வயிற்றுப்போக்கு, டெங்கு காய்ச்சல் தோல் பாதிப்பு  உளளிட்ட நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை 528 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அங்கு, ஆயிரக்கணக்கான பள்ளிகளும், சுகாதார கட்டமைப்புகளும் அழிகக்ப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

,மேலும்,  பாகிஸ்தானில் வெள்ளத்தில் சுமார் 60 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்