தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு மாகாணத்தில் லேடி ஃப்ரேர் என்ற கிராமம் உள்ளது. அங்கு சுமார் 4 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். சமீபத்தில் அங்கு வசிக்கும் ஒரு விவசாயின் ஆடு ஒரு குட்டியை ஈன்றது. அந்த குட்டி பாதி மனித உருவத்திலும், பாதி மிருக உருவத்திலும் இருந்தது. மேலும், அது இறந்தநிலையிலேயே பிறந்தது.
இதைக்கண்ட அந்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் மிகவும் பிற்போக்குவாதிகளாவும், மூட நம்பிக்கைகளையும் கொண்டிருந்ததால், அது சாத்தானின் குட்டி எனவும், அதனால், இந்த கிராமத்திற்கு பெரிய ஆபத்து வரப்போவதாகவும் அவர்கள் நம்பினர்.
இந்த புகைப்படம் வெளியே கசிய தொடங்கியதும், இது குறித்து ஆய்வு செய்ய அரசு தரப்பிலிருந்து அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் அந்த கிராமத்திற்கு சென்றனர். அந்த ஆட்டுக்குட்டி எப்படி இப்படி ஒரு வினோதமான குட்டியை ஈன்றது என்பதை அவர்கள் கண்டறிய முயன்றனர்.
அப்போது, அந்த குட்டியை ஈன்ற ஆடு, ஒருவகை வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதால், குறைமாதத்தில் அப்படி ஒரு குட்டியை ஈன்றது கண்டுபிடிக்கப்பட்டது.