வீடியோ கேம் விளையாட்டில் தோல்வியடைந்ததால் 4 பேரை சுட்டுக் கொன்ற நபர்

திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (08:17 IST)
அமெரிக்காவில் நபர் ஒருவர் வீடியோ கேம் விளையாட்டில் தோல்வியடைந்ததால் அப்பாவி பார்வையாளர்கள் 4 பேரை சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவம் அதிகரித்துக் கொண்டே போகிறது. மக்களிடம் சரளமாக துப்பாக்கி, புழக்கத்தில் இருப்பதாலேயே இதுமாதிரியான சம்பவங்கள் அதிகரிக்கிறது. பள்ளிக்கூடத்தில் துப்பாக்கி சூடு, கேளிக்கை விடுதியில் துப்பாக்கி சூடு என பல இடங்களில் நடந்த துப்பாக்கி சூட்டால் பல அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
 
இந்நிலையில் அமெரிக்காவின் புலோரிடா மாகாணத்தில் உள்ள ஜாக்சன்வில் லேண்டிங் எனும் வணிக வளாகத்தில் நேற்று வீடியோ கேம் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. அதில் இரண்டு வாலிபர்கள் போட்டியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பலர் அந்த விளையாட்டை பார்வையிட்டுக் கொண்டிருந்தனர்.
 
அப்போது அந்த விளையாட்டில் ஒரு நபர் தோல்வியடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், மக்களை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். 
இதனையடுத்து அந்த நபர்  தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் மரணனடைந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
 
இச்சம்பவம் புலோரிடா மாகாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்