இந்தியா முழுவதும் நடிகை ஸ்ரீதேவியின் மரணம்தான் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால் அதையும் தாண்டி நெஞ்சை உலுக்கும் ஒரு சம்பவம் சிரியாவில் நடந்து வருகிறது. என்ன நடக்கிறது என்றே தெரியாமல் ஓடி விளையாடும் வயதில் ரத்தத்தையும், குண்டு வெடிப்பையும் கேட்டுக் கொண்டிருக்கின்றனர் சிரியா நாட்டு குழந்தைகள். ஓட்டுமொத்த சிரியாவும் தற்போது ரத்த பூமியாகவே காட்சியளிக்கிறது. ஒவ்வொரு புகைப்படங்களும் பார்ப்போர் உள்ளத்தை நொருங்க செய்கிறது.
இந்நிலையில் ரசாயன தாக்குதலில் காயமுற்ற தனது தங்கையை, சிறுமி ஒருவர் செயற்கை ஆக்ஸிஜன் கொடுத்து காப்பாற்றியுள்ளார். ஆனால் தங்கையின் உயிரைக் காப்பாற்றிய சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். தன் உயிரைக் கொடுத்து தங்கையின் உயிரைக் காப்பாற்றிய சகோதரியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.