ஸ்டைலாக தம் போடும் சிம்பன்ஸி - வைரல் புகைப்படம்

செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (11:01 IST)
வடகொரியாவில் ஒரு சுட்டி சிம்பன்ஸி மனிதர்களைப் போலவே சிகிரெட் பிடிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வடகொரியா தலைநகர் பியாங்யாங்கில் உள்ள சென்ட்ரல் விலங்கியல் பூங்காவிற்கு பல இடங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். ஏனென்றால் இங்கு பலதரப்பட்ட விலங்குகள் இருப்பதாலும், அதிலும் முக்கியமாக அங்கிருக்கும் சிம்பன்ஸி வகை குரங்கு ஒன்று செய்யும் சேட்டையை பார்ப்பதற்காகவே பலர் இந்த பூங்காவிற்கு வருவர்.
 
அப்படி சமீபத்தில் அந்த சிம்பன்ஸி குரங்கு மனிதர்களைப் போன்றே சிகிரெட் பிடித்தது. ஸ்டைலாக ஒரு சிகிரெட்டிலிருந்து மற்றொரு சிகரெட்டைப் பற்றவைத்து வாயிலிருந்து புகை விடுகிறது. இந்த புகைப்படமானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்