அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர்கள் ஷீலா – ரயான் தம்பதியினர். இவர்களுக்கு 5 மற்றும் 3 வயதில் இரண்டு குழந்தைகளும், 18 மாத குழந்தை ஒன்றும் உள்ளது. ஷீலா தம்பதியினர் தீவிர சைவ உணவு பழக்கமான வீகன் என்னும் முறையை பின்பற்றி வந்துள்ளனர்.
இந்த வீகன் முறைப்படி பால், முட்டை போன்ற உணவுகளை கூட எடுத்துக் கொள்ள மாட்டார்கள். முழுக்க முழுக்க காய்கறிகளை மட்டுமே உணவாக கொள்ளும் முறை அது! அந்த உணவு முறையை பின்பற்றியவர்கள் தங்கள் குழந்தைகளுக்கும் அதே முறையிலேயே உணவு அளித்துள்ளனர். பால், முட்டை போன்ற புரத உணவுகளை அளிக்காததால் 18 மாத குழந்தை சத்துக்குறைப்பாடு அடைந்துள்ளது. இதனால் உடல்வற்றி காணப்பட்டுள்ளது. அப்ப்டி இருந்தும் தொடர்ந்து அவர்கள் வீகன் முறையிலேயே குழந்தைகளுக்கு உணவளித்து வந்துள்ளனர்.
இதனால் உடல் சத்துக்குறைப்பாட்டால் குழந்தை இறந்து போனது. மேலும் இரண்டு குழந்தைகளும் பல் சொத்தை, உடல்சோகை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சத்தான உணவை அளிக்காமல் குழந்தையை கொன்ற குற்றத்திற்காக அந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.