இந்நிலையில் ரமல்லா என்கிற இடத்தில், 17 வயதுடைய பாலஸ்தீன சிறுவன் ஒருவன் மக்கள் நிறைந்த பகுதிக்குள் புகுந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் கத்தியால் சரமாரியாக குத்தினான். இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதனையடுத்து அந்த சிறுவனை, இஸ்ரேலிய இளைஞர் ஒருவர் சுட்டுக்கொன்றார். இதனால் எல்லைப்பகுதியில் பாலஸ்தீன சிறுவன் கொல்லப்பட்டதை கண்டித்து பாலஸ்தீன வாலிபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.