பெண்ணின் சிறுநீரகத்தில் 3000 கற்கள்: அதிர்ந்த மருத்துவர்கள்!
வியாழன், 26 ஜூலை 2018 (15:21 IST)
சீனாவில் பெண் ஒருவரின் சிறுநீரகத்தில் 3000 கற்களை இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், அவை அனைத்தையும் வெற்றிகரமாக வெளியே எடுத்துள்ளனர்.
சீனாவில் ஜியாங்ஸு மகாணத்தில் உஜின் என்னும் மருத்துவமையில் 54 வயதான பெண் ஒரு தனக்கு தொடர் முதுகுவலி இருப்பாதக கூறி சிகிச்சைக்கு வந்தார். அப்போது மருத்துவர்கள் அவரது சிறுநீரகத்தை பரிசோதித்த போது சிறுநீரக கற்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
ஸ்கேன் செய்த போது சிறுநீரக கற்கள் அதிக அளவில் இருப்பதை உறுதி செய்து உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்தனர்.
அறுவை சிகிச்சைக்கு பின்னர் மருத்துவர்கள் அந்த கற்களை எண்ணிப்பாத்த போது அதன் எண்ணிக்கை 2,980 ஆக இருந்தது. இத்தனை கர்களுடன் இந்த பெண் எவ்வாறு இத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார் என்பது மருத்துவர்களின் அதிர்ச்சிக்கு காரணமாக உள்ளது.