19 வது மாடியில் அந்தரத்தில் தொங்கியபடி உயிருக்கு போராடிய 5 வயது சிறுவன்

புதன், 18 ஜூலை 2018 (08:30 IST)
சீனாவில் அந்தரத்தில் தொங்கியபடி சிறுவன் உயிருக்கு போராடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக வெளிநாடுகளில் அடுக்குமாடி குடியிருப்புகளில் குழந்தைகள் இதுபோன்று பால்கனியில் இருந்து தவறி அந்தரத்தில் தொங்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. ஆனால் இதுவரை எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.
 
சீனாவின் ஷென்ஷென் மாகாணத்தில் உள்ள 20 ஃப்லோர் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் தனது பாட்டியுடன் 5 வயது சிறுவன் வசித்து வந்துள்ளான். சம்பவத்தன்று சிறுவனின் பாட்டி வெளியே சென்றிருந்தார். தூங்கி எழுந்த சிறுவன் வீட்டில் பாட்டி இல்லாததால்  தனது பாட்டியை தேடியுள்ளான். பாட்டியை காணாததால் பால்கனி பகுதிக்கு வந்த அச்சிறுவன் அங்கிருந்து தவறி விழுந்ததாக தெரிகிறது.
 
அதிர்ஷ்டவசமாக அந்த சிறுவன் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த கம்பியை கெட்டியாக பிடித்தபடி அலறியுள்ளான். உடனடியாக மீட்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த மீட்பு குழுவினர் சிறுவனை பத்திரமாக மீட்டனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்