சுனாமியில் சிக்கி 27 மணி நேரம் நீச்சலடித்து உயிர் பிழைத்த 57 வயது நபர்!

வெள்ளி, 21 ஜனவரி 2022 (15:30 IST)
சுனாமியில் சிக்கி 27 மணி நேரம் நீச்சலடித்து உயிர் பிழைத்த 57 வயது நபர்!
சுனாமியில் சிக்கி 27 மணி நேரம் நீச்சல் அடித்து உயிர் தப்பிய 57 வயது நபர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 
 
பசுபிக் பெருங்கடலில் சமீபத்தில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக மிகப்பெரிய சுனாமி ஏற்பட்டது என்பதும் இந்த சுனாமியால் பல பகுதிகள் முற்றிலும் அழிந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த சுனாமியில் சிக்கிய 57 வயது நபர் சுமார் இருபத்தி ஏழு மணி நேரம் சுனாமி அலையில் நீச்சலடித்து தான் வசித்த தீவிலிருந்து அருகில் உள்ள தீவு ஒன்றுக்கு சென்று உள்ளார்
 
இதனை அடுத்து அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் அவர் தான் உண்மையான நீச்சல் வீரர் என்றும் பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இருபத்தி ஏழு மணி நேரம் உணவு தண்ணீர் எதுவும் இன்றி நீச்சலடித்து செய்த சாதனைக்கு பாராட்டு குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்