மீண்டும் நிலநடுக்கம் - இந்தோனேசிய மக்கள் 5 பேர் உயிரிழப்பு

திங்கள், 20 ஆகஸ்ட் 2018 (10:42 IST)
இந்தோனேஷியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 5 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.
பல்வேறு தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது.
 
சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக  1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. சுமார் 460 பேர் உயிரிழந்தனர்.
 
இந்நிலையில் ஜகர்தாவில் இருந்து சுமார் 1500 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தீவின் கிழக்கு பகுதியில் நேற்று காலை மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.3 ஆக பதிவாகி இருந்தது.
இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை லோம்பாக் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.9ஆக பதிவாகி இருந்தது. நிலநடுக்கத்தின்போது கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் லோம்போக் தீவில் 2 பேரும், அருகில் உள்ள சாம்பவா தீவில் 3 பேரும் என மொத்தம் 5 பேர் பலியாகி உள்ளனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்