நாய்களை இறைச்சிக்காக கொன்றால் 3 ஆண்டு சிறை!

Sinoj

செவ்வாய், 9 ஜனவரி 2024 (18:47 IST)
தென்கொரியாவில் நாய் இறைச்சி அவர்களின் வழக்கமான உணவாக இருந்தாலும்,  நாய்களின்  உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றாக தென்கொரியாவில் பிரதமர் ஹான் டக் சூ தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இந்த நாட்டில்  நாய்கள் இறைச்சிக்காக அதிகளவில் கொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில், நாய்களின்  உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தென்கொரியாவில் நாய்கள் இறைச்சிக்காக கொல்லப்படுவதை தடுக்கும் வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2027 ஆம் ஆண்டில் இருந்து இறைச்சிக்காக நாய்களை கொல்லவோ, வளர்க்கவோ, விற்பனை செய்யவோ முயன்றால் 3 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாய் இறைச்சி அவர்களின் வழக்கமான உணவாக இருந்தாலும்,  நாய்களின்  உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்